முதல் பாகத்தில் செத்து போன கேரக்டர் எப்படி இரண்டாம் பாகத்தில்? ‘ஜெயிலர் 2’ படத்தில் விநாயகன்?

Siva
புதன், 3 டிசம்பர் 2025 (19:00 IST)
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' மாபெரும் வெற்றியடைந்த நிலையில், தற்போது 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
 
இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்த  ரம்யா கிருஷ்ணன், மிர்ணா ஆகியோருடன் பாலிவுட் நடிகர் ஷாருக்கான், மோகன்லால், விஜய் சேதுபதி போன்ற நட்சத்திரங்கள் இணையலாம் என்ற தகவல் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
 
இந்த நிலையில், 'ஜெயிலர்' முதல் பாகத்தில் வில்லனாக மிரட்டிய நடிகர் விநாயகன், தான் 'ஜெயிலர் 2' படத்திலும் நடிக்கவிருப்பதாக தெரிவித்துள்ளார். இருப்பினும், தனது கதாபாத்திரம் நிகழ்கால காட்சிகளிலா அல்லது பிளாஷ்பேக் பகுதியிலா என்பது குறித்து அவருக்கு தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
 
விநாயகனின் இந்த புதிய உறுதிப்படுத்தல், 'ஜெயிலர் 2' மீதான ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அண்ணல் அம்பேத்கர் நினைவு தினம்: நாடாளுமன்றத்தில் தலைவர்கள் அஞ்சலி

உலகப் புகழ்பெற்ற வார்னர் பிரதர்ஸ்-ஐ விலைக்கு வாங்கிய நெட்ஃபிளிக்ஸ்.. எத்தனை லட்சம் கோடி?

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

இன்று வெளியாக இருந்த பாலைய்யாவின் ‘அகண்டா 2’ திடீர் ஒத்திவைப்பு.. நிதி சிக்கலா?

அடுத்த கட்டுரையில்
Show comments