Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் ரிலீஸான மூன்று படங்களுக்கும் பாசிட்டிவ்வான வரவேற்பு!

vinoth
சனி, 24 ஆகஸ்ட் 2024 (07:25 IST)
நேற்று வாழை, கொட்டுக்காளி மற்றும் போகுமிடம் தூரமில்லை ஆகிய படங்கள் ரிலீஸாகின. இதில் வாழை மற்றும் கொட்டுக்காளி ஆகிய திரைப்படங்கள் ரிலீஸுக்கு முன்பே ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தன. அதற்கேற்றார் போல ரசிகர்களை தியேட்டர் நோக்கி ஈர்த்து வருகின்றன.

ஆனால் இதில் விமல், கருணாஸ் நடிப்பில் உருவான ‘போகுமிடம் வெகுதூரமில்லை’ என்ற படம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ரிலீஸானது. Shark 9 pictures சார்பில்  சிவா கில்லாரி தயாரிப்பில், நடிகர் விமல் மற்றும் கருணாஸ் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, அறிமுக இயக்குநர் மைக்கேல் K ராஜா இயக்கத்தில்,   உருவாகியிருக்கும் திரைப்படம் "போகுமிடம் வெகு தூரம் இல்லை".

இந்த படமும் இப்போது பார்வையாளர்களை வெகுவாக ஈர்க்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக இந்த படத்தில் கருணாஸின் நடிப்பு மிகச் சிறப்பாக அமைந்துள்ளதாக படம் பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதன் மூலம் ஒரு நாளில் ரிலீஸான மூன்று படங்களும் பாசிட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்றிருப்பது தமிழ் சினிமாவுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹேமா கமிஷனில் வாக்குமூலம் அளித்த 20 சாட்சிகள்.. சிக்கலில் திரையுலக பிரபலங்கள்..!

தனுஷின் 52வது படத்தின் டைட்டில் இதுதான்.. இசையமைப்பாளர் யார்?

நடிகைகள் குறித்து அவதூறுப் பேச்சு: மன்னிப்பு கோரினார் டாக்டர் காந்தராஜ்

அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட் ஆல்பம்!

கிளாமர் உடையில் துஷாராவின் ஸ்டைலிஷான போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments