Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டோல்கேட் விவகாரத்தில் எடப்பாடியாரின் ஆணை பெற்று மக்களுக்காக களம் இறங்குவோம் -சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார்!

டோல்கேட் விவகாரத்தில் எடப்பாடியாரின் ஆணை பெற்று மக்களுக்காக  களம் இறங்குவோம் -சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார்!

J.Durai

, வியாழன், 11 ஜூலை 2024 (16:42 IST)
திருமங்கலத்தில் டோல்கேட் பிரச்சனை தொடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.பி உதயகுமாரிடம் பல்வேறு அமைப்பு சேர்ந்தவர்கள் மனு அளித்தனர் இதனைத் தொடர்ந்து, ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 
தென்தமிழகத்தில் நுழைவுப் பகுதியான திருமங்கலம் தொகுதி கப்பலூர் டோல்கேட் விதிமுறை அமைக்கப்பட்டுள்ளது. 
 
இதை அகற்றப்பட வேண்டும் என்று மக்களின் கோரிக்கையாக உள்ளது.
 
இதே எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பொழுது ஸ்டாலின் நான் கப்பலூர் டோல்கேட்டை அகற்ற பாடுபடுவேன் என்று கூறினார்.
 
அதனுடைய வீடியோ குறிப்பு தற்போது வலைதளங்களில் பரவி வருகிறது மூன்று ஆண்டுகள் ஆகியும் கொடுத்த வாக்குறுதியை பற்றி தற்போது வாய் திறக்க மறுத்து வருகிறார்.
 
இது குறித்து நாங்கள் போராடினால் எங்கள் மீது பொய் வழக்கு தொடுத்து கைது செய்யும் சூழ்நிலை உள்ளது.
 
தற்போது, உள்ளூர் வாகன ஒட்டிகளுக்கு 2 லட்சம் முதல் 12 லட்சம் வரை அபதாரம் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. தற்பொழுது, உள்ளூர் வாகனங்கள் 50% கட்டணத்துடன் செல்ல வேண்டும் என்று செய்தி வெளிவந்தது இதனால்,மக்கள் அச்சமடைந்துள்ளனர். 
 
அனைத்து மக்களும் போராட தூண்டும் வகையில் உள்ளது. இதே எடப்பாடியார் ஆட்சி காலத்தில் மத்திய அரசிடம் பேசி உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண சலுகை அளிக்கப்பட்டது.
 
தற்பொழுது முற்றிலும் அகற்றப்பட வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்கள், தொழிலாளர்கள், பல்வேறு சங்கங்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
 
ஆனால், மக்களிடத்தில் அரசு அக்கறை செலுத்தவில்லை. இதன் மூலம் கடையடைப்பு போராட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. ஏற்கனவே, உள்ளூரில் சாலைகளை அடைத்தார்கள் மக்கள் போராட்டத்தின் பின்பு அது திறக்கப்பட்டது. இந்த அரசு மக்கள் பிரச்சனைக்கு அக்கறை செலுத்தவில்லை.
 
மத்திய அரசு ஏற்கனவே, 60 கிலோமீட்டர் உள்ள டோல்கேட்டை அகற்றப்படும் என்று கூறியுள்ளார்கள் அதை பயன்படுத்தி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து செய்திருக்க வேண்டும் ஆனால், அதை அரசு செய்யவில்லை  எடப்பாடியார் இருக்கும்பொழுது, டோல்கேட்டில் பணியாற்றிய ஊழியர்களுக்கு கவுன்சில் கொடுக்கப்பட்டது.
 
அதன் மூலம் மக்களிடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பயிற்சி அளிக்கப்பட்டது தற்போது, அந்த போதிய பயிற்சி அளிக்கப்படவில்லை. இதனால், தினந்தோறும் பிரச்சனைகள் ஏற்படுகிறது. மக்களுக்கு சேவை செய்யாமல்லாப நோக்கத்துடன் தான் தற்போது இயங்கி வருகிறது.கப்பலூர் டோல்கேட் அகற்றபலமுறை அரசுக்கு கவனத்திற்கு எடுத்துச் சென்றும் இன்னமும் தீர்வு காணப்படவில்லை.
 
கப்பலூர் டோல்கேட் பிரச்சனையில் நாங்கள் மக்களுக்கு உறுதுணையாக  எடப்பாடியாரிடம் அனுமதி பெற்று மக்களுடன் இணைந்து போராட்டங்களுக்கு, நாங்கள் இணைந்து தீர்வு காண போராடுவோம் ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சும், ஆளுங்கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சு என்பது போல உள்ளது.
 
தமிழகத்தில் போதை கலாச்சாரம்,கள்ளச்சாரயம் தலைவிரித்து ஆடுகிறது.கள்ளச்சாராயத்தால் குடித்து 68 பேர் பலியாகினர் ஆனால், கலெக்டர் மாற்றி விட்டோம் காவல்துறையை மீது நடவடிக்கை எடுத்து விட்டோம் என்று தீர்வு காணப்பட்டதாக கூறுகிறார்.
 
இன்றைக்கு தேசிய கட்சி தலைவர் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் வெட்டி படுகொலை செய்யப்படுகிறார். 
 
ஆனால்,இதற்கு கமிஷனரை மாற்றம் செய்ய விட்டு பிரச்சினைக்கு தீர்வு கண்டோம் என்ற தோற்றத்தை முதலமைச்சர் ஏற்படுத்துகிறார் .
 
அரசியல் கட்சித் தலைவருக்கு இந்த நிலைமை என்றால், சாமானிய மக்கள் உயிருக்கு என்ன பாதுகாப்பு அரசு கொடுக்கும் தமிழகத்தில் கொலை நடக்காத நாளே இல்லை. இது எல்லாம் இரும்புகரம் கொண்டு அரசு அடக்க வேண்டும்.
சட்ட ஒழங்கு குறித்து, சட்டமன்றத்தில் கடந்தாண்டு எடப்பாடியார் பேசினார் அதற்கு நடவடிக்கை எடுத்திருந்தால், தற்போது இந்த பிரச்சனை இருந்திருக்காது. பிரச்சனை நடந்து பின்பு அரசு இப்போதுதான் தூங்கி எந்திரித்து இருக்கிறது. சட்டசபையில் கள்ளச்சார சம்பவம் குறித்து கவனம் ஈர்ப்பு தீர்மானம் விதி 55 படி கொண்டு வந்தோம். 
 
ஆனால், ஜீரோஹவரில் பேச வேண்டும் என்று சபாநாயகர் கூறுகிறார் .
அதனைத் தொடர்ந்து,விதி எண் 56 படி பேச நாங்கள் வாய்ப்பு கேட்டோம். ஆனால், மறுக்கப்பட்டது. ஏற்கனவே, விதி எண் 56 படி இதுபோன்ற விவாதம் எடுக்கப்பட்டது. எதிர்கட்சிகளுக்கு பேச வாய்ப்பு மறுக்கப்படுகிறது ஆனால்,ஜால்ரா போடுவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. எதிர்க்கட்சியின் குரல் நசுக்கப்படுகிறது. மக்களின் பிரதிநிதியாக உள்ள நாங்கள் மக்கள் குரலாக நாங்கள் பேசுவதற்கு மறுக்கப்படுகிறது.இது ஜனநாயகமா சர்வாதிகாரமா? எங்களுக்கு பேச வாய்ப்பளித்து விட்டு அது தவறு என்றால் விதிமீறல் என்று அவை குறிப்பிட்டு நீக்கலாம் அதையும் செய்யவில்லை என கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாட்டை துரைமுருகன் கைதுக்கு அதிமுக கண்டனம்.! கருத்துரிமையின் கழுத்தை நெரிக்கும் செயல்.!