Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேர்தல் வாக்குறுதி கொடுத்த அண்ணாமலை என்னாச்சு.?அவரது போன் ரிசார்ஜ் பண்ணவில்லையா.?ரீசார்ஜ் பண்ணி தரணுமா.?-அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநிலத் தலைவர் சிங்கை இராமச்சந்திரன்!

Advertiesment
தேர்தல் வாக்குறுதி கொடுத்த அண்ணாமலை என்னாச்சு.?அவரது போன் ரிசார்ஜ் பண்ணவில்லையா.?ரீசார்ஜ் பண்ணி தரணுமா.?-அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநிலத் தலைவர்  சிங்கை இராமச்சந்திரன்!

J.Durai

, செவ்வாய், 30 ஜூலை 2024 (19:30 IST)
கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாநில தலைவரும்,கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளருமான சிங்கை இராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். 
 
அப்போது பேசிய அவர்.....
 
கோவையை பொறுத்தவரை அண்ணாமலை சொல்லியது என்னாச்சு.ஒரே போனில் பிரச்சினை தீர்வு என்று சொல்லிய அண்ணாமலை என்ன ஆனது.நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அண்ணாமலை அளித்த வாக்குறுதிகள் எதும் நடக்கவில்லை.
 
கோவை வளர்ச்சிக்கு எந்த விதமான திட்டங்கள் வரவில்லை.
 
தேர்தல் வாக்குறுதி  நமது கோவை கனவாக போய்விட்டது.பாஜக அண்ணாமலை  கோவைக்கு கொடுத்த வாக்குறுதிகளை படித்தால் நேரம் தான் வீண்.கோவைக்கு எந்த திட்டமும் ஏன் அறிவிக்கவில்லை.திமுகவிற்கும் பாஜகவிற்கு எந்த வித்தியாசமும் இல்லை.கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றதவர்கள் இவர்கள் தான்.சென்னை மெட்ரோ பற்றி  பேசும் அண்ணாமலை கோவை மெட்ரோவிற்கு என்ன செய்தார். எம். பி வேணும் சொல்லும் பாஜக, வரி வேணும் சொல்லும் பாஜக தமிழ்நாட்டிற்கு ஏன் எந்த திட்டமும் இல்லை என்றது.அண்ணாமலை ரொம்ப பேசுகிறார்.பாஜக 21 தொகுதியில் டெபாசிட் வாங்கவில்லை.கோவைக்கும், அண்ணாமலைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.இங்கு நாடாளுமன்ற தேர்தலில் நின்றீர்கள்.அதிமுகவை பற்றி பேச அண்ணாமலைக்கு எந்த அருகதையும் கிடையாது.கோவை மக்களுக்கு இவர்கள் நல்லது செய்ய முடியாது.அதிமுக தான் கோவைக்கு வளர்ச்சி திட்டங்கள் செய்யும்.மின் கட்டணம் உயர்வால் சிறு குறு தொழில் நிறுவனங்கள் அனைவரும் பாதிப்படைந்து உள்ளனர். திமுகவும் பாஜகவும் மக்களை மத்தாளம் போன்று இரண்டு பக்கமும் அடிக்கிறார்கள்.கோவைக்கு வந்த பிரதமர் கோவைக்கு ஒரு திட்டத்தை கொடுத்தாரா.  தமிழ்நாட்டிற்கு எத்தனை முறை அண்ணாமலை அழைத்து வந்தார் ஏன் ஒரு திட்டத்தையும் தமிழ்நாட்டிற்கு கொடுக்கவில்லை.
அண்ணாமலை சொல்லிய ஹாட் லைன் எண் என்னாச்சு.ரிசார்ஜ் பண்ணவில்லையா. ரீசார்ஜ் பண்ணி தரணுமா. 27 லட்சம் டி செலவு என்பது வெள்ளலூர் குப்பை கிடங்கை டீ யை ஊற்றி அனைத்து இருப்பார்கள் போல.திமுக விஞ்ஞான ஊழல் செய்ப்பவர்கள்.வீடு கட்ட ஆன்லைனில் அனுமதி என்பது அமைதியாக கட்டணத்தை உயர்த்தி உள்ளனர்.
 
தமிழ்நாட்டிற்கு பட்ஜெட் ஏமாற்றம் தான். அண்ணாமலை இவ்வளவு பேசியும் , இவ்வளவு செலவு செய்தும் சி.பி ராதாகிருஷ்ணன் ஐ விட விட அரை சதவீதம் வாக்கு குறைவு தான் வாங்கியுள்ளார்.
 
அண்ணாமலை கோவையில் போட்டியிடுவது அந்நியமாக பார்க்க வில்லை.பாஜகவும் திமுகவும் இரகசிய உறவு உள்ளது என தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொடர் ரயில் விபத்துக்கள்.. மத்திய அரசின் மெத்தனமே காரணம்: மம்தா பானர்ஜி