Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சின்ன நடிகர் பெரிய நடிகர் என்று பார்க்க மாட்டார்கள் சிறந்த கதையம்சம் உள்ள படங்களை ரசிகர்கள் வெற்றி பெற செய்வார்கள்!

Advertiesment
சின்ன நடிகர் பெரிய நடிகர் என்று பார்க்க மாட்டார்கள் சிறந்த கதையம்சம் உள்ள படங்களை ரசிகர்கள் வெற்றி பெற செய்வார்கள்!

J.Durai

, சனி, 3 ஆகஸ்ட் 2024 (10:06 IST)
நடிகர் பிரசாந்த் நடிகை பிரியா ஆனந்த் ஜோடியாக நடித்துள்ள அந்தாகன் திரைப்படம் வருகிற 9 ஆம் தேதி வெளியாகிறது.
 
இதுகுறித்து திருச்சியில் பிரசாந்த் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசும் போது:-
 
நானும் (பிரசாந்த்) நடிகை பிரியா ஆனந்த் ஜோடியாக நடித்த அந்தகன் படத்தில் நான் கண் தெரியாதவனாக நடித்துள்ளேன். 
 
இது சவால் நிறைந்த கேரக்டர் என்று என்பதை இந்தப் படத்தில் நடிக்கும் போது தெரிந்து கொண்டேன். 
 
சிறந்த கதை மற்றும் திரைக்கதை உள்ள படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு இந்தப் படத்தில் காதல்,சண்டை திரில்லர்,பாடல் என அனைத்தும் உள்ளது.
 
இந்தப் படத்தில் சிம்ரன் ஊர்வசி, கார்த்திக், வனிதா, மோகன்,வைத்தியா ஆகியோர் நடிப்பு உங்களை பெரிதும் கவரும்.படம் வெளியாவதற்கு முன்பு திருட்டுத்தனமாக படத்தை இணைய தளத்தில் வெளியிடுவதால் சினிமா தொழில் நசிந்து போய்விடும். சினிமாவைப் பார்த்து ரசிகர்கள் ரீல்ஸ் வெளியிடுவது ஆபத்தானது.
 
நடிகர்கள் அரசியலுக்கு வருவது அவர்கள் விருப்பம் மக்களுக்கு நல்லது செய்பவர்களை நான் ஆதரிப்பேன். 
 
தனது கதைக்கு ஏற்ற நடிகர்களை இயக்குனர் சங்க தேர்வு செய்வார். தமிழகம் முழுவதும் அந்தாகன் வட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறேன் 
 
இருசக்கர வாகனத்தில் செல்லும்போது அவசியம் ஹெல்மெட் அணிந்து நிதானமாக செல்ல வேண்டும் என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் கட்சியில் சீட் கேட்ட கீர்த்தி சுரேஷ்… !