Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வேட்டையன் படத்தில் ரஜினிக்கு மாஸான இண்ட்ரோ பாடல்… ரசிகர்களுக்கு குஷி அப்டேட்!

வேட்டையன் படத்தில் ரஜினிக்கு மாஸான இண்ட்ரோ பாடல்… ரசிகர்களுக்கு குஷி அப்டேட்!

vinoth

, வியாழன், 11 ஏப்ரல் 2024 (14:44 IST)
ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் இப்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் பூஜை சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் நடந்தது. முதல் கட்ட ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் தொடங்கியது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர்.

படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் திருவனந்தபுரம் மற்றும் திருநெல்வேலியில் நடக்க, இரண்டாம் கட்ட ஷூட்டிங் மும்பையில் படமாக்கப்பட்டது. அங்கே அமிதாப் பச்சன் நடிக்கும் காட்சிகளை படமாக்கியுள்ளது படக்குழு. அதையடுத்து இப்போது சென்னையில் இந்த படத்தின்  பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. படம் அக்டோபரில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெறவுள்ள ஒரு அறிமுகப் பாடல் காட்சி விரைவில் படமாக்கப்பட உள்ளதாம். இந்த பாடலுக்காக சென்னையில் மிகப் பிரம்மாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டுள்ளதாம். இந்த பாடலில் நடன இயக்குனராக தினேஷ் பணியாற்ற உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் திரைப்படத்தின் பின்னணி இசைக் கோர்வை ஹைதராபாத்தில் தொடங்கியது!