Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆர்.எம். வீரப்பன் ஒருபோதும் பணத்திற்குப் பின்னால் சென்றவர் கிடையாது- ரஜினிகாந்த்

Advertiesment
rajinikanth

SInoj

, செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (22:00 IST)
ஆர்.எம். வீரப்பன் ஒருபோதும் பணத்திற்குப் பின்னால் சென்றவர் கிடையாது. அண்ணா கூறிய கடமை, கண்ணியம் கட்டுப்பாட்டை கடைப்பிடித்து வாழ்ந்தவர் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன் இன்று காலமானார்.
 
அவருக்கு வயது 98 ஆகும். தி. நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
 
அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
 
அப்போது அவர் கூறியதாவது:
 
''ஆர்.எம். வீரப்பன் ஒருபோதும் பணத்திற்குப் பின்னால் சென்றவர் கிடையாது. அண்ணா கூறிய கடமை, கண்ணியம் கட்டுப்பாட்டை கடைப்பிடித்து வாழ்ந்தவர். எனக்கும் அவருக்குமான நட்பு ஆழமானது. உணர்ச்சிகரமானது, புனிதமானது.   நம்மை விட்டு சென்றுள்ளார் அவர். எம்.ஜி.ஆரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும் சினிமா வாழ்க்கையிலும் வலது கையாக இருந்தவர்.  அவரால் உருவாக்கப்பட்ட பல சிஷியர்கள், மத்திய மாநில அமைச்சர்களாகி பேர் புகழுடன் இன்றும் வலம் வந்து கொண்டிருக்கின்றனர் . என் வாழ்வில் அவரை என்னால் மறக்கவே முடியாது. அவரை இழந்துவாரும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்'' என்று தெரிவித்துள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அண்ணாமலை முன் பாஜகவில் இணைந்த தமிழ் காமெடி நடிகை.. வைரல் புகைப்படம்..!