Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகளுக்கு ஆதரவாக வெற்றிமாறன் டிவீட்!

Webdunia
வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (13:29 IST)
விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக வெற்றிமாறன் டிவீட் செய்துள்ளார்.

விவசாயிகள் போராட்டத்துக்கு பாடகி ரிஹானா, கிரேட்டா தென்பர்க் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் ஆதரவு தெரிவித்ததும் இதுவரை கமுக்கமாக இருந்த விளையாட்டு வீரர்கள் பலரும் ‘இது உள்நாட்டுப் பிரச்சனை. வெளிநாட்டவர்கள் தலையிடக் கூடாது’ என கூறிவருகின்றனர். இதனால் அவர்கள் ரசிகர்களால் கேலி செய்யப்பட்டும் வருகின்றனர்.

இந்நிலையில் தெளிவான அரசியல் பார்வை உள்ள கலைஞர்கள் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமா இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ போராட்டம் என்பது தங்கள் குரல் கேட்கப்படாத மக்களின் ஒரு வடிவம். அரசாங்கத்தின் வலிமை மக்களால் கொடுக்கப்பட்டது. அது மக்களின் தேவைகளை நிறைவேற்றவே பயன்பட வேண்டும். கார்பரேட்களின் பங்குதாரர்கள் போல செயல்படக் கூடாது. விவசாயிகள் இந்தியாவின் ஆன்மாவைக் காப்பாற்ற செயல்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு அளிப்பதே ஜனநாயகத்துக்கு செய்யும் கடமையாகும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷின் அடுத்த படத்தை இயக்கப் போவது இவர்தானா?... வெளியான தகவல்!

ஸ்ரீதேவியைக் கைது செய்ய சொர்க்கத்துக்குப் போவார்களா?.. அல்லு அர்ஜுன் கைதை விமர்சித்த ராம் கோபால் வர்மா!

நான் கைதி 2 வில் இருப்பேனா?... அர்ஜுன் தாஸ் அளித்த பதில்!

படப்பிடிப்பில் பிரபாஸ் காயம் அடைந்தாரா?.. ராஜாசாப் படக்குழு விளக்கம்!

1500 கோடி ரூபாய் வசூலைக் கடந்த புஷ்பா 2..!

அடுத்த கட்டுரையில்
Show comments