நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் ஜல்லிக்கட்டு உள்பட பல சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து உள்ளார் என்பதும் அவரது டுவிட்டரில் சமூகப் பிரச்சினைகளை பதிவு செய்யப்படும் ட்வீட்டுகள் பெரும் ஆதரவைப் பெற்று வரும் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் விவசாயிகள் போராட்டம் குறித்து பெரிய ஹீரோக்களே வாயை திறக்காமல் இருக்கும் நிலையில் ஜீவி பிரகாஷ் தைரியமாக தனது கருத்தை முன்வைத்துள்ளார்
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: மக்களுக்கு போராடுவதற்கான உரிமை உள்ளது; மக்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை; விவசாயிகளிடம் வேளாண் சட்டங்களை ஏற்றுக்கொள்ள சொல்வது தற்கொலைக்கு சமம்; அவர்கள் உரிமைக்களுக்காக போராடுவதும் ஜனநாயகம்தான்! அவர்கள் “ஏர்முனை கடவுள்” என்றழைத்தால் மட்டுமே நமை படைத்தவனும் மகிழ்வான்... என்று பதிவு செய்துள்ளார்
ஜிவி பிரகாஷின் இந்த கருத்துக்கு அவரது ரசிகர்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்