Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இடஒதுக்கீட்டை விமர்சிக்கும் வசனத்தை சூர்யா நீக்கச் சொன்னார்: உதயநிதி ஸ்டாலின்

Advertiesment
இடஒதுக்கீட்டை விமர்சிக்கும் வசனத்தை சூர்யா நீக்கச் சொன்னார்:  உதயநிதி ஸ்டாலின்
, செவ்வாய், 27 ஜூன் 2023 (11:13 IST)
ஏழாம் அறிவு திரைப்படத்தில் இடம் பெற்ற இட ஒதுக்கீடு குறித்த சர்ச்சைக்குரிய வசனத்தை நடிகர் சூர்யா நீக்க சொன்னதாகவும் அப்போது எனக்கு அரசியல் புரிதல் இல்லாததால் அதை நீக்காமல் விட்டுவிட்டேன் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 
நேற்று நடைபெற்ற சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட உதயநிதி, ‘கடந்த 2011 ஆம் ஆண்டு ஏழாம் அறிவு திரைப்படத்தை பார்த்துவிட்டு அதில் இட ஒதுக்கீட்டை விமர்சிக்கும் வகையில் இருக்கும் வசனத்தை நீக்க சொல்லி நடிகர் சூர்யா என்னிடம் கேட்டுக் கொண்டார்.
 
ஆனால் அப்போது எனக்கு பெரிதாக அரசியல் புரிதல் இல்லாததால் இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன். ஆனால் என்னுடைய தயாரிப்பில் வெளியான படத்தில் அப்படி ஒரு வசனம் இருந்திருக்கக் கூடாது என இப்போதுதான் நான் உணர்கிறேன் என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார். அவருடைய இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துஷாரா விஜயனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!