மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் பிருத்விராஜ். தமிழுலும் இவர் மொழி, ராவணன் உள்ளிட்ட படங்களில் நடித்து அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில் அவர் நடிப்பில் இப்போது உருவாகி வரும் வினாயத் புத்தா என்ற படப்பிடிப்பின் போது சண்டைக் காட்சி படமாக்கப்பட்ட போது அவருக்கு காலில் பலத்த அடி ஏற்பட்டுள்ளது.
 
									
			
			 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	இதற்காக கொச்சினில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிருத்விராஜுக்கு இன்று காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் மூன்று மாதங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
									
										
			        							
								
																	இதனால் அவர் நடிப்பில் உருவாகி வரும் படங்களின் ஷூட்டிங் தாமதமாகியுள்ளன. ரசிகர்கள் பலரும் சமூகவலைதளங்கள் வாயிலாக “சீக்கிரம் குணமாகி வாருங்கள்” என அவருக்கு நல்வார்த்தைகளைக் கூறி வருகின்றனர்.