Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகர் சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்ட சூப்பர் ஸ்டார்

Advertiesment
shivrajkumar
, வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (15:21 IST)
நடிகர் சித்தார்த்திடம் கன்னட சூப்பர் ஸ்டார் சிவாண்ணா மன்னிப்புக் கேட்டுள்ளார்.

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகர் சித்தார்த். இவர் நடித்து தயாரித்துள்ள படம் சித்தா. இப்படத்தை  பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கியுள்ளார்.  இது, அண்ணன் மகளுக்கும் ஹீரோவுக்குமான அன்புருவான கதை. இப்படம்  செப்டம்பர் 28 ஆம் தேதி ரிலீஸானது.

இந்த நிலையில்,  இப்படத்தை பிரபல நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் பாராட்டி வருகின்றனர்.

நேற்று. கர்நாடக மாநிலம், பெங்களூரில்  இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த கன்னட அமைப்பினர் இந்த புரமோசன் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சித்தார்த்திற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து சித்தார்த் மேடையில் இருந்து வெளியேறிய பின்னர் அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், நடிகர் சித்தார்த்திடம் கன்னட சூப்பர் ஸ்டார் சிவாண்ணா மன்னிப்புக் கேட்டுள்ளார்.

அதில், இப்படி ஒரு சம்பவம் நடந்தது எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னட மக்கள் அனைவரிடமும் அன்பு செலுத்துபவர்கள், அனைத்து மொழிப் படங்களையும் விரும்பி பார்ப்பவர்கள் என்று கூறி நேற்று செய்தியாளர் சந்திப்பின்போது, நடிகர் சித்தார்த்தை வலுக்கட்டாயமாக  கன்னட அமைப்பினர் வெளியேற்றியதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓடிடியில் ரிலீஸ் ஆனது சந்தானத்தின் கிக் திரைப்படம்!