கடந்த சில வருடங்களாக சித்தார்த் நடித்த படங்கள் வெற்றி பெறாத நிலையில் இப்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் கதாநாயகனாக நடித்து தயாரித்து சில மாதங்களாக ரிலீஸ் ஆகாமல் காத்திருந்த சித்தா திரைப்படம் நேற்று ரிலீஸ் ஆகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் படத்தைப் பார்த்த கமல்ஹாசன் அதைப் பாராட்டி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் “நான் சித்தா படத்தைப் பார்த்தேன். குழந்தைகளுக்கு அம்மா என்னதான் சொல்லிக் கொடுத்தாலும், அவர்கள் மனதில் பதிய ஒரு கதை சொல்லவேண்டும். இறுதியில் அழுத்தத்தோடு செல்லாமல், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சொல்லி இருப்பது எனக்கு பிடித்திருக்கிறது.
பெண் குழந்தைகள், ஆண் குழந்தைகள் என்ற வித்தியாசம் இல்லாமல் அவர்களை நாம் குழந்தைகளாகவே பார்க்கவேண்டும். இந்த படத்துக்கு மகாநதி படம்தான் ஒரு உந்துதல் என்று படக்குழுவினர் சொன்னார்கள்.அப்படி என்றால் எனக்கு மகாநதியை விட இந்த படம் பிடித்திருக்கிறது.” எனக் கூறியுள்ளார்.