Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கஜா புயல் இயற்கையாக வரவில்லை! இதைத்தான் அஜித் அப்போதே சொன்னார்.?

கஜா புயல் இயற்கையாக வரவில்லை! இதைத்தான் அஜித்  அப்போதே சொன்னார்.?
, வியாழன், 22 நவம்பர் 2018 (16:02 IST)
கஜா புயல் கடந்த 16-ந் தேதி 110 கிலோ மீட்டர் வேகத்தில் வேதாரண்யம் அருகே கரையை கடந்த கஜா புயலால் தமிழகத்தில் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக விவசாயம் செழிப்பாக இருந்த டெல்டா மாவட்டங்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளது.
 
அனைவரும் இயற்கையால் நடந்த இந்த சோகத்தை பற்றி கவலைப்பற்றிக்கொண்டு இருக்கும் நேரத்தில் சிலர் இது இயற்கையாக உருவானது இல்லை. திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்று கூறியுள்ளனர்.
 
ஆம் ஹார்ப் என்ற ஆயுதம் மூலம் நிகழ்த்தியுள்ளார்களாம். (HAARP – High Frequency Active Auroral Research Program) என்பது ஒரு அமெரிக்க இரகசிய ஆயுதமாகும்..
 
இதன்மூலம் செயற்கையாக உருவாக்கி விவசாயத்தை அழித்து ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த வல்லாதிக்க நாடுகள் முயற்சித்துள்ளதாக கூறியுள்ளனர்.
 
இதனை தற்போது ஒருவர் முகநூலில் ஷேர் செய்ய இந்த ரகசிய செய்தி வைரலாகிவருகிறது. ஆனால் இதெல்லாம் எந்தளவு உண்மை என தெரியவில்லை. சிலர் இதை கதை செமையாக எழுதுகிறார்கள் என்று கூறி கலாய்த்துள்ளனர்.
webdunia
இதில் யோசிக்கவேண்டியது என்னவென்றால் தல அஜித் நடித்த விவேகம் படத்தில் கூட சீக்ரட் சொசைட்டியை சேர்ந்த சிலர் செயற்கை பூகம்பத்தை ஏற்படுத்தி இந்தியாவை தாக்க முயற்சிப்பார்கள். இதை அஜித் முறியடிப்பார். அதனால் கஜா செயற்கையாக டெல்டா மக்களை குறி வைத்து தாக்கப்பட்டதோ என ஐயம் கொண்டுள்ளனர்.
 
மேலும் இவர்கள் சொல்லும் இயற்கையை கட்டுப்படுத்தும் இந்த விஷயம் ஹாலிவுட்டில் கடந்த வருடம் வந்த GeoStorm என்ற படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆடை படத்தில் புது முயற்சி - இயக்குனரை பாராட்டிய அமலா பால்