Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீரா மிதுன் பற்றி தர்ஷனுக்கும் தெரியும்! இருவருக்கும் உள்ள தொடர்பை கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க!

மீரா மிதுன் பற்றி தர்ஷனுக்கும் தெரியும்! இருவருக்கும் உள்ள தொடர்பை கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க!
, வியாழன், 27 ஜூன் 2019 (12:39 IST)
மோசடி விவகாரத்தில் சிக்கிய சர்ச்சை நாயகி மீரா மிதுன் நேற்று பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று அடுத்தடுத்து பல ரகளையை செய்துவந்தார். ஆனால் அவரை கண்டாலே பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு எரிச்சலாகிறது ஆளாளுக்கு அவருடன் சண்டையிட்டு வருகின்றனர். 

 
அதற்கு காரணம் அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களிடம் பணமோசடியில் ஈடுபட்டதற்காக அவருக்கு வழங்கப்பட்ட அழகிப்பட்டத்தை திரும்ப பெற்று அவருக்கு பதிலாக இரண்டாம் இடம் பிடித்த சனம் ஷெட்டி என்ற நடிகைக்கு மிஸ் தென்னிந்திய அழகி பட்டத்தை வழங்க முடிவுசெய்தனர்.  இந்த விவகாரம் சில நாட்களுக்கு முன்னர் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். 

webdunia

 
மீரா மீதுனிடமிருந்து கைப்பற்றிய அழகி பட்டத்தை அந்த போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்த சனம் ஷெட்டிக்கும் வழங்கபட்டது. பெங்களூரை சேர்ந்த சனம் ஷெட்டி தமிழில் அம்புலி, விலாசம், கதம் கதம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும்  தற்போது கிடைத்துள்ள அதிர்ச்சி தகவல் என்னவென்றால், சனம் ஷெட்டி  பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள தர்ஷனின் காதலி தானாம். தர்ஷன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதும் சனம் பிக்பாஸ் செட்டிற்கு வந்திருந்தார். எனவே, மீரா மிதுன் பற்றி தர்ஷனுக்கும் முழு விவரம் தெரியும் என்கிறது நம்பத்தகுந்த தகவல். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முகன் ராவ் -க்கும் லொஸ்லியாவுக்கும் காதல்? - ப்ரோமோ வீடியோ!