Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

"பிக்பாஸ் 3-ல் இவர் தான் டைட்டில் வெல்வார்" - அடித்து சொல்லும் பிரபலம்!

Advertiesment
, புதன், 26 ஜூன் 2019 (18:47 IST)
2017-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். தொடர்ந்து மூன்றாவது முறையாக கமல்ஹாசனே இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

 
இரண்டு சீசன்களும் வெற்றியடைந்ததை அடுத்து தற்போது பிக்பாஸ் 3 நிகழ்ச்சி துவங்கியுள்ளது. பாத்திமா பாபு, லொஸ்லியா, சாக்‌ஷிஅகர்வால், மதுமிதா, கவின், அபிராமி, சரவணன், வனிதா, விஜய்குமார், சேரன், ஷெரின், மோகன் வைத்யா, தர்ஷன், சாண்டி, முகென் ராவ் , ரேஷ்மா மற்றும் மீரா மிதுன் ஆகியோர் இம்முறை போட்டியாளர்களாக பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். 
 
இந்நிகழ்ச்சி தொடங்கி இரண்டு நாட்களாகிவிட்டது. வந்த முதல் நாள் எல்லோர் முகத்தில் ஒரே மகிழ்ச்சியும் அன்பும் இருந்தது.தற்போது சண்டை சர்ச்சரவுமாக ஆளாளுக்கு பிரச்னையை ஆரம்பித்துள்ளனர். தற்போது கேப்டனாக  வனிதா விஜயகுமார் உள்ளார். இவரே பாதி பிரச்சனைக்கு காரணமாகவும் இருந்துவருகிறார். 
 
இந்த சீசனில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களிலே கவின் இரண்டே நாளில் அதிக மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது. முதல் சீசனில் ஓவியாவும், இரண்டாவது சீசனில் ரித்விகாவும் தான் மக்கள் மனதை அதிகம் வென்றார்கள். இந்நிலையில் இந்த சீசனில் கவின் தான் மில்லியன் கணக்கான உள்ளங்களை வெல்வார் என நடன இயக்குனரும் நடிகருமான சதிஷ் கிருஷ்ணன் கூறியுள்ளார். இது எந்த அளவிற்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

"சித்தப்பு வேலைய ஆரம்பிச்சுட்டாரு " - லீக்கானது மூன்றாவது ப்ரோமோ!