Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சற்றுமுன் பிக்பாஸ் வீட்டில் நேர்ந்த சோகம்! கதறி அழுத போட்டியாளர்கள்! - வீடியோ!

சற்றுமுன் பிக்பாஸ் வீட்டில் நேர்ந்த சோகம்! கதறி அழுத போட்டியாளர்கள்! - வீடியோ!
, புதன், 26 ஜூன் 2019 (13:07 IST)
பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் அடுத்த ப்ரோமோ வீடியோவில் பிக்பாஸ் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் கண்கலங்கி அழுகின்றனர். 


 
இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ சற்றுமுன் இணையத்தில் வெளியாகியுள்ளது.  கடைசியாக வெளிவந்த முதல் ப்ரோமோவில்  மீரா மிதுனுக்கும் அபிராமிக்கு இடையே சண்டை ஆரம்பித்தது. அதற்கு வனிதா உள்ளிட்டோர் அபிராமிக்கு சப்போர்ட் செய்யும் விதத்தில் மீரா மிதுனுடன் சண்டையிட்டனர். அலசல் புரசலான இந்த வீடியோ வெளிவந்து பேசப்பட்டதையடுத்து தற்போது இரண்டாவது  வீடியோவில் அனைவரும் விம்மி விம்மி அழுகின்றனர். 
 
இந்த வீடியோவில் ரேஷ்மா தனது வாழ்க்கையில் நிகழ்ந்த கசப்பான நிகழ்வு குறித்து ஹவுஸ்மேட்ஸ் அனைவருடனும் பகிர்ந்துள்ள்ளார். அதாவது தான்  9 மாதம் கர்பமாக இருந்த நேரத்தில் குழந்தையை தொலைத்த சோகமான சம்பவம் குறித்து அழுதுகொண்டே கூறினார். இதனை கேட்டு வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் அழுதுவிட்டனர். பிறகு அனைவரும் ரேஷ்மாவுக்கு ஆறுதல் கூறி அரவணைத்தனர்.
 
இதேபோல் நேற்றைய இரண்டாவது ப்ரோமோவில் மோகன் வைத்யா அழுததும் குறிப்பிடத்தக்கது. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிக்பாஸ் போட்டியாளர்கள் மீரா மிதுனை வெறுப்பதற்கு இதுதான் காரணம் - வீடியோ!