இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் 'தங்கலான் என்ற திரைப்படத்தில் விக்ரம் மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் கதைக்களம் கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் ஷுட்டிங் மதுரை மற்றும் ஆந்திராவின் சில பகுதிகளில் முதலில் நடந்தது. இப்போது கோலார் தங்கவயலில் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகரான டேனியல் கால்டகிரன் நடிப்பதை படத் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அறிவித்துள்ளது.
இப்போது கே ஜி எப் உள்ளிட்ட இடங்களில் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் இந்த படம்தான் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் அடுத்த படமாக ரிலீஸ் ஆகவுள்ளதாகவும், அதன் பின்னரே சூர்யா 42 படம் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது. இதை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் CEO வான தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.