Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Thursday, 6 March 2025
webdunia

நாக சைதன்யாவைப் பற்றி தவறாக பேசினாரா சமந்தா?

Advertiesment
நாக சைதன்யாவைப் பற்றி தவறாக பேசினாரா சமந்தா?
, புதன், 5 ஏப்ரல் 2023 (14:33 IST)
நடிகை சமந்தா கடந்த நாக சைதன்யாவை விவாகரத்து செய்ததை அடுத்து  அந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது. விவாகரத்துக்குப் பிறகு அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ரிலீஸானது. அடுத்து குஷி மற்றும் சகுந்தலம் ஆகிய படங்கள் வரிசையாக ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன. அதே போல நாக சைதன்யாவும் அடுத்தடுத்து தனது படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

விவாகரத்து குறித்து பேசிய சைதன்யா “நாங்கள் இருவருமே அந்த கட்டத்தில் இருந்து அடுத்ததை நோக்கி நகர்ந்துவிட்டோம். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை தலைப்பு செய்தியாவதை நான் விரும்பவில்லை. ஆனால் எனது தொழிலில் அதுவும் ஒரு பகுதியாக உள்ளது. நாங்கள் விவாகரத்து பற்றி சொல்ல வேண்டியதை ஏற்கனவே சொல்லிவிட்டோம்” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இப்போது நாக சைதன்யா, வேறு ஒரு பெண்ணைக் காதலிப்பதாக சொல்லப்படுகிறது. அது பற்றி பேசிய சமந்தா “யார் யாரை காதலிக்கிறார்கள் என்பது பற்றி எனக்குக் கவலை இல்லை. எத்தனை முறை காதலித்தாலும், காதலின் அருமை தெரியாதவர்களுக்கு அது எப்போதும் கண்ணீரில்தான் முடியும். அந்த பெண்ணாவது மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்” எனக் கூறியதாக இணையதளம் ஒன்றில் செய்தி வெளியானது.

ஆனால் இந்த செய்தியை சமந்தா முற்றிலுமாக மறுத்து அந்த செய்தி பொய்யானது என விளக்கம் அளித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியன் 2 ஷூட்டிங்கில் ஷங்கரோடு பிரபல நடிகர்!