Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குறைந்த முதலீட்டில் நிரந்தர வருமானம் பெற சிறு தொழில் பயிற்சி முகாம்

Advertiesment
karur
, வெள்ளி, 31 மார்ச் 2023 (22:16 IST)
கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் வரவணை ஊராட்சி  மன்றமும் பசுமைக்குடி தன்னார்வ இயக்கமும் இணைந்து  இன்று 30/03/2023 ந்தேதி வரவணை ஊராட்சிக்குட்பட்ட  வேப்பங்குடி, கோட்டபுளிப்பட்டி, குளத்தூர், பாப்பணம்பட்டி பகுதிகளில் வாழும் பொதுமக்களுக்கு குறைந்த முதலீட்டில் நிரந்தர வருமானம் பெற சிறு தொழில் பயிற்சி முகாம் நடைபெற்றது.
 
இம்முகாமில் திரு கந்தசாமி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் சிறு தொழில் பயிற்சியாளர்கள் திருமதி ராமலட்சுமி திருமதி கவிதா ஆகியோர்கள் கலந்து கொண்டு பினாயில், சோப் ஆயில், பேனா இங்கு, சொட்டு நீளம், சோப்புத்தூள், லைசால், பாத்திரம் விளக்கும் பவுடர் ஆகிய வற்றை பொதுமக்களுக்கு செய்முறை விளக்கமாக பயிற்சி அளித்தார்கள் புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கி தற்சார்பு வாழ்வியல் மக்கள் ஊராட்சியாக மாற்றும் முயற்சியில் மக்களை தேடி சிறு தொழில் பயிற்சி வழங்கப்பட்டது.

பசுமைக்குடி தன்னார்வ இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு நரேந்திரன் கந்தசாமி தொழில்நுட்ப ஆலோசகர்(அமெரிக்கா) அவர்களின் வழிகாட்டுதல் படி சிறப்பானதொரு சிறு தொழில் பயிற்சி முகாம் நடைபெற்றது பயிற்சியில் 300க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்து கொண்டு அவர்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள் பசுமைக் குடி தன்னார்வ இயக்கத்தின் தன்னார்வலர்கள் சி கருப்பையா மற்றும் காளிமுத்து ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகிஸ்தானில் இந்து டாக்டர் சுட்டுக் கொலை!