தளபதி விஜய் நடித்து வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் இதுவரை ரூபாய் 400 கோடி பிசினஸ் ஆகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் சூர்யா நடித்து வரும் சூர்யா 42 என்ற படத்தின் வியாபாரம் 500 கோடியை தாண்டி விட்டதாக கூறப்படுவது நம்ப முடியாத தகவலாக உள்ளதை. கோலிவுட் திரையுலகை பொருத்தவரை விஜய்க்கு தான் அதிக பிசினஸ் உள்ளது என்றும் அவரது படம் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே பிசினஸ் முடிந்துவிடும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் மீண்டும் இணைந்துள்ள லியோ திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படம் இதுவரை 400 கோடி பிசினஸ் ஆகியுள்ளதாகவும் இன்னும் அதிக பிசினஸ் ஆகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சூரியா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 42 படத்தின் சாட்டிலைட் உரிமை டிஜிட்டல் உரிமை வெளிநாட்டு உரிமை உள்பட ஒரு சில பிசினஸ்களினால் 500 கோடி வரை வியாபாரம் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.
இது எந்த அளவுக்கு உண்மை என்பதை போக போக தான் தெரியும்.