Lyricist @VigneshShivN Brother Confirms That He Has Penned #ValimaiIntroSong By Liking The Fans Tweet ❤️" />

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

''வலிமை ''படத்தின் சூப்பர் அப்டேட்...’’தல’’ ரசிகர்கள் இந்திய அளவில் ஹேஸ்டேக் ட்ரெண்டிங்....

Advertiesment
''வலிமை ''படத்தின் சூப்பர் அப்டேட்...’’தல’’ ரசிகர்கள் இந்திய அளவில் ஹேஸ்டேக் ட்ரெண்டிங்....
, புதன், 10 பிப்ரவரி 2021 (17:30 IST)
நடிகர் அஜித்குமார் நடித்துவரும் வலிமை படத்தின் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இன்று அஜித்தின் மாஸான ஓபனிங் பாடல் தயாராகிவிட்டதாக தகவல் வெளியாகிறது.

இந்த ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை. இப்படத்தை தீரன் அதிகாரம் 1,நேர்கொண்ட பார்வை,போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். ஆனால் படம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் படத்தின் டைட்டில் போஸ்டர் கூட இன்னும் படத்தயாரிப்பாளரால் வெளியிடப்படவில்லை. ஆனால் அவர் தயாரிக்கும் மற்ற படங்களுக்கான வேலைகள் மட்டும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கோயிலுக்கு செல்லும் போது வலிமை அப்டேட் கேட்டு வேண்டிக்கொள்வது, போஸ்டர் அடித்து போனி கபூரிடம் வலிமை அப்டெட் கேட்பது என அஜித் ரசிகர்கள் ஆர்வமாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் டிக்டாக்கில் பிரபலமாக இருக்கும் ஜி பி முத்துவின் வீடியோக்களின் கமெண்ட் செக்‌ஷனில் சென்று வலிமை அப்டேட் கேட்டு நச்சரித்தனர்.
 

இந்நிலையில் வலிமை படத்தில் அஜித்குமார் குடும்பத்தினருடன் இணைந்து எடுத்துக்கொண்டு புகைப்படம் ஒன்று நேற்று சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் வலிமை படத்தில் நடிகர் அஜித்குமாரின் மாஸான  ஓபனிங் பாடல் தயாராகிவிட்டதாக இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தகவல் தெரிவித்துள்ளார். இப்பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளதாகத் கூறப்படுகிறது. இப்பாடலின் சூட்டிங் லொகேசன் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

ஏற்கனவே என்னை அறிந்தால் படத்தி வா ராஜ வா வா என்ற பாடலை அஜித்திற்காக விக்னேஷ் சிவன் எழுதியது குறிப்பிடத்தக்கது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மோடியின் ரசிகர் என்பதால் பாஜகவில் சேர்ந்தேன் – ராம்குமார் பதில்!