Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜி பி முத்துவிடம் வலிமை அப்டேட் கேட்டும் தொல்லைப்படுத்தும் ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ!

ஜி பி முத்துவிடம் வலிமை அப்டேட் கேட்டும் தொல்லைப்படுத்தும் ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ!
, செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (10:38 IST)
வலிமை படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் எல்லோரையும் தொல்லை செய்து வருவது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். ஆனால் படம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் படத்தின் டைட்டில் போஸ்டர் கூட இன்னும் படத்தயாரிப்பாளரால் வெளியிடப்படவில்லை. ஆனால் அவர் தயாரிக்கும் மற்ற படங்களுக்கான வேலைகள் மட்டும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கோயிலுக்கு செல்லும் போது வலிமை அப்டேட் கேட்டு வேண்டிக்கொள்வது, போஸ்டர் அடித்து போனி கபூரிடம் வலிமை அப்டெட் கேட்பது என அஜித் ரசிகர்கள் ஆர்வமாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் டிக்டாக்கில் பிரபலமாக இருக்கும் ஜி பி முத்துவின் வீடியோக்களின் கமெண்ட் செக்‌ஷனில் சென்று வலிமை அப்டேட் கேட்டு நச்சரித்துள்ளனர்.

இதையடுத்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ‘அண்ணாச்சி ஹெச் வினோத் அவர்களே. என்னய வலிமை அப்டேட் கேட்டு கொள்கிறார்கள்.. தயவு செய்து அவர்களுக்கு ஏதாவது அப்டேட் கொடுங்கள். எப்ப ரிலிஸாகும்னு சொல்லுங்க’ எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹோட்டல் பிஸ்னஸில் இறங்கிய கதாநாயகி நடிகை!