Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

470 நாட்களாக அப்டேட் இல்லாமல் காத்திருக்கும் அஜித் ரசிகர்கள்! அடப்பாவிகளா இதெல்லாம் கணக்கு வச்சிருக்கீங்களா?

470 நாட்களாக அப்டேட் இல்லாமல் காத்திருக்கும் அஜித் ரசிகர்கள்! அடப்பாவிகளா இதெல்லாம் கணக்கு வச்சிருக்கீங்களா?
, வியாழன், 4 பிப்ரவரி 2021 (17:09 IST)
வலிமை படத்தைப் பற்றி 470 நாட்களாக எந்த அப்டேட்டும் இல்லாமல் காத்திருப்பதாக அஜித் ரசிகர்கள் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.

இந்த ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். ஆனால் படம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் படத்தின் டைட்டில் போஸ்டர் கூட இன்னும் படத்தயாரிப்பாளரால் வெளியிடப்படவில்லை. ஆனால் அவர் தயாரிக்கும் மற்ற படங்களுக்கான வேலைகள் மட்டும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இந்த படத்துக்காக கிட்டத்தட்ட 470 நாட்களாகக் காத்திருக்கிறோம் என அஜித் ரசிகர்கள் சமுகவலைதளங்களில் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''யாரோ சொல்லி டுவீட் செய்கிறார் சச்சின்''… சுமந்த் சி. ராமன் விமர்சனம்!