100 கோடி ரூபாய் வசூலைத் தொட திணறும் சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’!

vinoth
புதன், 17 செப்டம்பர் 2025 (09:58 IST)
அமரன் படத்தின் இமாலய வெற்றியை அடுத்து சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்துள்ள ‘மதராஸி’ படம் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் ரிலீஸானது. கடந்த காலங்களில் அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் ரிலீஸாகும் சிவகார்த்திகேயன் ‘மதராஸி’ படம் அமைந்துள்ளது.

இந்த படத்தில் வித்யுத் ஜமால், பிஜு மேனன், ருக்மினி வசந்த் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்த படம் முதல் ஐந்து நாட்களில் சுமார் 60 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் அதன் பிறகு வசூல் படுத்துவிட்டது. தமிழில் வேறு படங்கள் கூட ரிலீஸாகாத நிலையிலும் ‘மதராஸி’ படத்துக்கு பெரியளவில் வசூல் இல்லை. இந்நிலையில் வெளியாகி 11 நாட்களில் உலகளவில் 90 கோடி ரூபாய் அளவுக்கு ‘மதராஸி’ வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் 100 கோடி ரூபாய் வசூலை மதராஸி எட்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முடிவுக்கு வந்தது 'ஹார்ட் பீட் - 2' .. மூன்றாம் பாகம் உண்டா?

பிக் பாஸ் 9: இந்த வாரம் சிறைக்குச் சென்ற போட்டியாளர்கள் யார் யார்?

லோகா ஓடிடி குறித்து அறிவித்த ஜியோ ப்ளஸ் ஹாட்ஸ்டார்!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

புதுப்பேட்டை 2 பாதி முடிஞ்சது… ஆயிரத்தில் ஒருவன் 2…?- செல்வராகவன் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments