மீனாவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘த்ரிஷ்யம் 3’ போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

vinoth
புதன், 17 செப்டம்பர் 2025 (09:55 IST)
மோகன் லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான திரிஷ்யம் திரைப்படம் இந்தியாவின் பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. 2015 ஆம் ஆண்டு வெளியான திருஷ்யம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு , கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் இந்தியைத் தவிர மற்ற மொழிகளில் எல்லாம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது.

இதே போல அதன் இரண்டாம் பாகமும் ரிலீஸாகி வெற்றி பெற்றது. தற்போது மூன்றாம் பாகத்துக்கான வேலைகளில் ஜீத்து ஜோசப் ஈடுபட்டு வருகிறார். த்ரிஷ்யம் முதல் பாகத்தின் தமிழ் ரீமேக்கான ‘பாபநாசம்’ படத்தில் கமல்ஹாசன் நடித்தார். அதையடுத்து இரண்டாம் பாகம் கோவிட் பெருந்தொற்று காரணமாக நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகி வெற்றிபெற்றது.

தற்போது மூன்றாம் பாகம் உருவாக்கும் பணிகளில் ஜீத்து ஜோசப் ஈடுபட்டு வருகிறார். முன்னதாக மூன்றாம் பாகத்தோடு படம் முடியும் என அறிவித்திருந்தார். ஆனால் இப்போது அவர் “திரிஷ்யம் மூன்றாம் பாகத்துக்குப் பிறகு நான்காம் பாகமும் உள்ளது. ஆனால் அதோடு நான் த்ரில்லர் கதைகளை இயக்குவதில் இருந்து விடைபெறவுள்ளேன்” என அறிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று நடிகை மீனா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ‘திரிஷ்யம் 3’ பட போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அட்லி-அல்லு அர்ஜுன் படத்துக்காக சாய் அப்யங்கர் பெற்ற சம்பளம் இத்தனை கோடியா?

‘மகுடம்’ இயக்குனரைக் காக்கவைத்து அவமானப்படுத்திய விஷால்…!

டியூட் படத்தின் அதிரி புதிரி ஹிட்… மீண்டும் இணையும் ப்ரதீப் & மைத்ரி மூவி மேக்கர்ஸ்!

குடும்பத்தோடு தீபாவளி கொண்டாட்டம்… அவமானப்படுத்திய நபர்… சூரி கொடுத்த ‘நச்’ பதில்!

நான் விவாகரத்து பெற்றபோது சிலர் கொண்டாடினர்… சமந்தா வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments