சுப்ரமணியபுரம் படத்தில் நடித்த நடிகர் முருகன் காலமானார்… ரசிகர்கள் அஞ்சலி!

vinoth
வியாழன், 5 ஜூன் 2025 (11:07 IST)
2008 ஆம் ஜூலை 4 ஆம் தேதி சுப்ரமண்யபுரம் திரைப்படம் ரிலீஸானது. பெரிய நடிகர்கள், இயக்குனர், தொழில்நுட்பக் கலைஞர்கள் இல்லாமல் ரிலீஸான அந்த திரைப்படம், அதன் திரைக்கதை மற்றும் உருவாக்கம் காரணமாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதுமட்டுமில்லாமல் விமர்சனப்பூர்வமாக பாராட்டுகளக் குவித்து ஒரு Cult திரைப்படமாக இப்போது வரை கொண்டாடப்படுகிறது.

படத்தில் சசிகுமார், ஜெய், ஸ்வாதி, கஞ்சா கருப்பு உள்ளிட்டவர்கள் நடிக்க, எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்ய, ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்திருந்தார். மிகக்குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. இதையடுத்து கடந்த ஆண்டு இந்த திரைப்படம் ரி ரிலீஸானது.

இந்த படத்தில் சிறு வேடத்தில் நடித்தவர்கள் கூட ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்கள். அப்படி மொக்கச்சாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்தான் இலைக்கடை முருகன் என்கிற மொக்கச்சாமி. அந்த படத்தில் அவர் நடிப்பும் அவர் பேசும் வசனமும் இன்றளவும் நினைவு கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் தற்போது உடல்நலக் குறைவு காரணமாகக் காலமாகியுள்ளார். அவருக்கு வயது 78. அவரது மறைவை ஒட்டி ரசிகர்கள் அவருக்கு சமூகவலைதளங்களில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

23 ஆண்டுகளுக்குப் பிறகு களம் கண்ட அஜித்குமார்: மலேசிய ரேஸிங் அனுபவம் குறித்து நெகிழ்ச்சி

சரத்குமார்தான் சிறந்த நடிகர்! இவர எந்த லிஸ்ட்ல சேர்க்குறது? ராஜகுமாரனின் அடுத்த எபிசோடு

உலகப் புகழ்பெற்ற வார்னர் பிரதர்ஸ்-ஐ விலைக்கு வாங்கிய நெட்ஃபிளிக்ஸ்.. எத்தனை லட்சம் கோடி?

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments