Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தன்னுடைய ரோல் மாடல் பெயரிலானக் காரை வாங்கிய அஜித்!

vinoth
வியாழன், 5 ஜூன் 2025 (11:01 IST)
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை வாரிக் குவித்துள்ளது. தற்போது சினிமாவுக்கு வெளியே கார் பந்தயங்களிலும் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார் அஜித்.

தற்போது கார் ரேஸ் பந்தயங்களில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அஜித் சினிமாவிற்கு எப்படி நேரம் ஒதுக்கப் போகிறார் என்பது குறித்தக் கேள்வி அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனாலும் ஆண்டுக்கு ஒரு படம் தன்னிடம் இருந்து வரும் என்று அவர் கூறியுள்ளார்.

சமீபத்தில் கார் ரேஸில் தன்னுடைய ரோல் மாடலான மறைந்த அயர்டன் சென்னாவுக்கு அஜித் மரியாதை செலுத்தினார். இத்தாலியில் உள்ள அவரது நினைவகத்துக்கு சென்ற அஜித் அவர் சிலையின் பாதங்களில் முத்தமிட்டு மரியாதை செலுத்தினார். இந்நிலையில் சென்னா நினைவாக உருவாக்கப்பட்டுள்ள maclarern senna என்ற விலையுயர்ந்த காரை தற்போது அஜித் வாங்கியுள்ளார். அந்த காருடன் அவர் இருக்கும் புகைப்படத்தைப் பகிர அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பிரான்ஸைச் சேர்ந்த சென்னா 1994 ஆம் ஆண்டு இத்தாலியில் நடந்த கார் ரேஸ் பந்தயத்தில் கலந்துகொண்ட போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பாலைவனத்தில் சோலையாக தனித்து நிற்கும் சமந்தா… அழகிய க்ளிக்ஸ்!

லோகேஷும், சேகர் கமுலாவும் இரு வேறு பார்வை கொண்டவர்கள்… நாகார்ஜுனா கருத்து!

கூலி முதல் பாதி ‘லாக்’… படம் பார்த்த ரஜினியின் ரியாக்‌ஷன் இதுதான்!

அப்பாவின் ஸ்டைலை அப்படியே பின்தொடரும் சண்முக பாண்டியன்… கொம்பு சீவி படக்குழுவினருக்கு விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments