Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

'ஆர்.ஆர்.ஆர்’ இரண்டாம் பாகம்: கதை எழுத தொடங்கிவிட்டதாக அறிவிப்பு!

Advertiesment
RRR
, ஞாயிறு, 13 நவம்பர் 2022 (17:19 IST)
பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா ஜூனியர் என்டிஆர் நடித்த 'ஆர்.ஆர்.ஆர்’  திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த படம் 550 கோடி பட்ஜெட்டில் உருவாகி ரூ.1200 கோடி வசூல் செய்து மாபெரும் வசூல் சாதனை செய்தது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் படத்தின் இரண்டாம் பாகத்தின் கதையை தனது தந்தை விஜயேந்திர பிரசாத் தொடங்கி விட்டதாக இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
இதனை அடுத்து இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்.எஸ்.ராஜமெளலி  இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் தொடங்கயிருக்கும் நிலையில் 2024 ஆம் ஆண்டு ஆர்.ஆர்.ஆர் படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
’ஆர்.ஆர்.ஆர். படத்தின் முதல் பாகத்தில் நடித்த நட்சத்திரங்கள் அனைவருமே இரண்டாம் பாகத்திலும் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

138 இலக்கு கொடுத்தாலும் வெற்றிக்கு போராடும் பாகிஸ்தான்: 4 விக்கெட் விழுந்ததால் பரபரப்பு