Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாபி சிம்ஹாவின் மனைவியை ஏமாற்றிய இணையதளம்!

பாபி சிம்ஹாவின் மனைவியை ஏமாற்றிய இணையதளம்!
, வியாழன், 22 ஜூலை 2021 (16:45 IST)
நடிகர் பாபி சிம்ஹா சக நடிகையான ரேஷ்மியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

தமிழ் சினிமாவில் ஹீரோ - ஹீரோயினாக வலம் வந்த பல்வேறு ஜோடிகள் காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். அவர்களில் முக்கியமானவர்களான அஜித் - ஷாலினி,  சூர்யா - ஜோதிகா, சினேகா - பிரசன்னா இப்பட்டி சொல்லிக்கொண்டே போகலாம் இந்த லிஸ்லிட்டில் நடிகர் பாபி சிம்ஹா - ரேஷ்மி மேனன். இவர்கள் இருவரும் கடந்த 2015ம் ஆண்டு வெளிவந்த ‘உறுமீன்’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது காதலித்தனர்.  பின்னர் 2016 ஆம் ஆண்டு இருவரும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டனர். பின்னர் ஒரு வருடம் கழித்து முத்ரா என்ற அழகான பெண் குழந்தை பிறந்தது. அதையடுத்து கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் ரேஷ்மி தனது சமூகவலைதளப் பக்கத்தில் ”Accessories for her” என்ற இணையதளத்தில் ஒரு பொருளை பணம் கொடுத்து வாங்கியதாகவும், ஆனால் இரண்டு மாதம் ஆகியும் பொருள் இன்னும் வரவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் யாரும் இனிமே அந்த இணையதளத்தை நம்பி ஏமாற வேண்டாம் எனக் கூறியதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அறிமுகப்படுத்திய இயக்குனருக்கு வாய்ப்பளித்த அஜித்… ஆனால் அவர் சொன்ன வார்த்தையால்?