கொரோனா அச்சுறுத்தலைப் புறக்கணித்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு காரணம் என்னவென ஜப்பான் பிரதமர் தெரிவித்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஒலிம்பிக் வீரர்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கவிருந்த மேலும் 2 தடகள வீரர்களுக்கு கொரோன உறுதியாகியுள்ளது. மேலும் 2 வீரர்களுக்கு கொரோனா உறுதியானதால் அங்கு கொரோனா மொத்த பாதிப்பு 87ஆக உயர்ந்துள்ளதாக ஒலிம்பிக் குழு தகவல் அளித்துள்ளது.
இதனிடையே சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கொடுத்த நெருக்கடியினால் தான் கொரோனா அச்சுறுத்தலைப் புறக்கணித்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை நடத்துகிறது ஜப்பான் என்ற செய்தி வெளியானது. இந்த விமர்சனத்தை ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சூகா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது, நாங்கள் தான் நடத்துகிறோம் என்று கையை உயர்த்த யாரும் இல்லை. எனவே நாங்கள் உயர்த்தினோம், ஏனெனில் நாங்கள் நடத்த விரும்பினோம், யாரும் என் மீது எதையும் வலியத் திணிக்க முடியாது அப்படி அவர்கள் திணித்தால் நான் திருப்பி அடிக்கக் கூடிய நபர் என்பது அனைவருக்கும் தெரியும் என தெரிவித்துள்ளார்.