Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என் அப்பா கதையில் நானும் மகனும் நடிக்கவுள்ளோம்… ரவி மோகன் பகிர்ந்த தகவல்!

Advertiesment
என் அப்பா கதையில் நானும் மகனும் நடிக்கவுள்ளோம்… ரவி மோகன் பகிர்ந்த தகவல்!

vinoth

, வெள்ளி, 17 ஜனவரி 2025 (11:14 IST)
ஜெயம் ரவி நடித்த படங்கள் சமீபகாலமாக சரியாக ஓடாத நிலையில் காதலிக்க நேரமில்லை படமும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்நிலையில் அவர் சமீபத்தில் தனது பெயரை ரவி மோகன் என மாற்றி புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருப்பதாக அறிவித்துள்ளார்.

இப்போது அடுத்தடுத்து படங்களில் நடிக்கவுள்ள அவர் விரைவில் படம் இயக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர் “என் அப்பா மிகச்சிறப்பான கதை ஒன்றை வைத்துள்ளார். அதில் நானும் என் மகன் ஆரவ்வும் நடிக்கவுள்ளோம். ஆரவ் ஏற்கனவே ‘டிக் டிக் டிக்’ படத்தில் நடித்துள்ளான். அவனின் படிப்புப் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக இப்போது சினிமாவில் இருந்து விலகியுள்ளார். அவரின் பள்ளிப் படிப்பு முடிந்ததும் என் இயக்கத்தில் அந்த படத்தில் நடிப்பார்” எனக் கூறியுள்ளார்.

ஜெயம் ரவி நடிப்பில் அடுத்து ஜீனி உள்ளிட்ட படங்கள் வரிசையாக வெளிவரவுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாடிவாசல் படத்திலும் இந்தி திணிப்பு எதிர்ப்பு அரசியல்… வெற்றிமாறன் போட்ட ஸ்கெட்ச்!