கோட் படத்தை அடுத்து ஏஜிஎஸ் புரொடக்ஷன் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் டிராகன் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கிய நிலையில் இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
பெரும்பாலானக் காட்சிகளுக்கான ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. படத்தில் மிஷ்கின் மற்றும் கே எஸ் ரவிக்குமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். கதாநாயகிகளாக அனுபமா பரமேஸ்வரன் மற்றும் கடாயு லோஹர் ஆகியோர் நடிக்கின்றனர். படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி மாதம் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான “தி ரைஸ் ஆஃப் ட்ராகன்” இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார்.