கோட் படத்தை அடுத்து ஏஜிஎஸ் புரொடக்ஷன் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் டிராகன் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கிய நிலையில் இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
பெரும்பாலானக் காட்சிகளுக்கான ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. படத்தில் மிஷ்கின் மற்றும் கே எஸ் ரவிக்குமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். கதாநாயகிகளாக அனுபமா பரமேஸ்வரன் மற்றும் கடாயு லோஹர் ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவும் நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் திடீரென பிப்ரவரி 6 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.