45 மொழிகளில் டப் செய்யப்படும் ராமாயணம்… பிரபல தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்!

vinoth
செவ்வாய், 12 ஆகஸ்ட் 2025 (08:38 IST)
பாலிவுட் இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் மூன்று பாகங்களாக உருவாகும் ராமாயணம் சம்மந்தப்பட்ட படத்தில் ராமன் வேடத்தில் ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும்  ராவணன் வேடத்தில் கேஜிஎஃப் புகழ் யாஷும் நடிக்க, அனுமன் வேடத்தில் சன்னி தியோலும், சூர்ப்பனகை வேடத்தில் ரகுல் ப்ரீத் சிங்கும், கைகேயியாக லாரா தத்தாவும் நடிக்கின்றனர்.

இந்த படத்தை நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டுடியோஸ் மற்றும் யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன.  இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடந்து முதல் பாகத்துக்கானக் காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன.

முதல் பாகம் 2026 ஆம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் இந்த படம் பற்றி பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் மஞ்சு தெரிவித்துள்ள தகவல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இது சம்மந்தமாக “சமீபத்தில் நான் யாஷை சந்தித்தேன். அப்போது அவர் ராமாயணம் படம் 45 மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகும் எனக் கூறினார்” எனத் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரீனாவை காப்பாற்றினாரா தந்தை விஜய்? 'ஹார்ட் பீட் - 2' இணையத்தொடர் இன்றுடன் நிறைவு..!

ஊதித் தள்ள நான் மண் அல்ல.. மலை..! கவனம் ஈர்த்த காந்தா பட ட்ரெய்லர்!

12 ஆண்டுகளுக்கு பிறகு கம்பேக் கொடுக்கும் ரோஜா! சிறப்பு வீடியோவை வெளியிட்ட படக்குழு

வித்தியாசமான டிசைனர் ஆடையில் அசத்தல் போஸ் கொடுத்த அதுல்யா ரவி!

கூந்தலலை காற்றிலாட க்யூட் போஸ் கொடுத்த க்ரீத்தி ஷெட்டி!

அடுத்த கட்டுரையில்
Show comments