Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சீரியலில் அம்மா - மகன்.. நிஜத்தில் திருமணம் செய்து கொண்ட ஜோடி..!

Advertiesment
சீரியல் நடிகை

Siva

, செவ்வாய், 5 ஆகஸ்ட் 2025 (17:07 IST)
சின்னத்திரை தொடரில், அம்மா - மகன் கதாபாத்திரங்களில் நடித்த நடிகர் சூயாஷ் ராயும், நடிகை கிஷ்வர் மெர்ச்சன்ட்டும் நிஜ வாழ்க்கையில் காதலித்து திருமணம் செய்துகொண்ட சம்பவம், ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
2010 முதல் 2011 வரை ஒளிபரப்பான 'பியார் கி யே ஏக் கஹானி' என்ற இந்தி தொடரில், கிஷ்வர் மெர்ச்சன்ட் தாய் கதாபாத்திரத்திலும், சூயாஷ் ராய் அவரது மகன் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். இத்தொடரில் அம்மா - மகனாக நடித்த இவர்கள், படப்பிடிப்பின்போது ஒருவரையொருவர் காதலித்து  திருமணம் செய்து கொண்டனர்.  இந்த ஜோடியில், கணவர் சூயாஷ் ராயைவிட மனைவி கிஷ்வர் மெர்ச்சன்ட் 8 வயது மூத்தவர். மேலும், கிஷ்வர் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர், சூயாஷ் இந்து மதத்தைச் சேர்ந்தவர்.
 
 இந்த வயது வித்தியாசம் மற்றும் மத வேறுபாடுகள் காரணமாக, இருவருக்கும் குடும்பங்கள் மற்றும் பிற தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்புகள் வந்தன. இருப்பினும், அனைத்து தடைகளையும் கடந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
 
திரையுலகில் பல நட்சத்திரங்கள் விவாகரத்து அறிவிக்கும் இந்த காலத்தில், கிஷ்வரும் சூயாஷும் மத மற்றும் வயது வேறுபாடுகளை தாண்டி வெற்றிகரமாக ஒரு குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிங்டம் படத்துக்கு எதிர்ப்பு… ராமநாதபுரத்தில் காட்சிகள் ரத்து.. பின்னணி என்ன?