Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்தடுத்து ஹிட் படங்கள்… தயாரிப்பாளராகவும் களமிறங்கும் சூரி…!

vinoth
செவ்வாய், 12 ஆகஸ்ட் 2025 (08:29 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவைக் கலைஞராக இருந்த சூரி வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தின் மூலம் ஹீரோவானார். அந்த படம் ஹிட்டானதைத் தொடர்ந்து அவர் நடித்த கருடன் மற்றும் கொட்டுக்காளி ஆகிய திரைப்படங்களும் வெற்றிபெற்று அவரை முன்னணிக் கதாநாயகன் ஆக்கின.

இதையடுத்து அவரின் அடுத்த படமாக ‘மாமன்’ மே 16 ஆம் தேதி ரிலீஸானது. இந்த படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்க சூரியுடன் ஐஸ்வர்யா லஷ்மி, பாபா பாஸ்கர், ராஜ்கிரண் மற்றும் லப்பர் பந்து புகழ் ஸ்வாஸிகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். தாய்மாமன் உறவை மையப்படுத்தி நெஞ்சைக் கசக்கி பிழியும் படமாக மாமன் இருந்தது. இந்த படம் சென்னையைத் தாண்டி நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதுவரை சூரி கதாநாயகனாக நடித்த எந்த படமும் வசூலில் தோல்வி அடைந்ததில்லை. இந்நிலையில் சூரி இனிமேல் தான் நடிக்கும் படங்களில் நடிப்பதோடு மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் களமிறங்கவுள்ளாராம். சம்பளமாகப் பெறாமல் இனிமேல் இலாபத்தில் பங்கு என்ற விகிதத்தில் இனி அவர் சம்பளம் பெற உள்ளாராம். ஏற்கனவே அவரது படங்களை அவரது மேனேஜர் குமார் என்பவர்தான் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

45 மொழிகளில் டப் செய்யப்படும் ராமாயணம்… பிரபல தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்!

அடுத்தடுத்து ஹிட் படங்கள்… தயாரிப்பாளராகவும் களமிறங்கும் சூரி…!

ஐபிஎல் அணியை வாங்காமல் விட்டதற்காக இப்போது…. சல்மான் கான் ஓபன் டாக்!

நான் தனுஷை காதலிக்கின்றேனா? நடிகை மிருணாள் தாக்கூர் பதில்..!

பாபநாசம் புகழ் எஸ்தர் அனிலின் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments