Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகுபலி ஸ்டைலில் மீண்டும் ஒரு படம்… பிரபாஸை இயக்கும் கேஜிஎப் இயக்குனர்!

Webdunia
வெள்ளி, 11 ஜூன் 2021 (08:16 IST)
இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் மீண்டும் ஒரு வரலாற்றுப் படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

பாகுபலி படங்களுக்கு பிறகு இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் நடிப்பில் வெளியான பாகுபலி1,2 ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றதை அடுத்து அவர் புகழும் பெருகிறது. மார்க்கெட்டும் எகிறியது.  சூப்பர் ஸ்டார் அளவுக்கு அளவு இமேஜும் ஏகத்தும் அதிகரித்துள்ளது. அதனால் அடுத்து அவர் நடிக்கவுள்ள திரைப்படம் என்ன என்ன என்று சினிமாத்துறை மட்டுமல்லாமல் ரசிகர்களும் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.

இதே போல கேஜிஎப் படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான இயக்குனர் பிரசாந்த் நீல். இவர்கள் இருவர் கூட்டணியில் இப்போது சலார் என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் போது ஏற்பட்ட நட்பால் பிரசாந்த் நீல் சொன்ன வரலாற்று பின்னணிக் கொண்ட கதையில் நடிக்க சம்மதித்துள்ளாராம் பிரபாஸ். அந்த படம் பிரபாஸின் 25 ஆவது படமாக இருக்கும் என்றும் அதை தில் ராஜு தயாரிப்பார் என்றும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அறிவாளியாக இருந்தால் வெளியே போய்விடுங்கள்… உபேந்திரா படத்தின் ஸ்லைடால் கடுப்பான ரசிகர்கள்!

யாரும் பயப்படவேண்டாம்… நான் நலமுடன் திரும்பி வருவேன் –சிவராஜ்குமார் நம்பிக்கை!

கங்குவா படத்தைக் கட்டம் கட்டி விமர்சித்தது தவறு.. பாக்யராஜ் வேதனை!

திரும்பும் பக்கமெல்லாம் பாசிட்டிவ் ரிவ்யூ.. தேசிய விருது உறுதி!? - விடுதலை-2 க்கு கிடைக்கும் மாஸ் வரவேற்பு!

அஜித்தின் அடுத்த படத்தை இயக்கும் லிஸ்ட்டில் இருக்கும் மூன்று இயக்குனர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments