Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராஜமௌலி இயக்கும் குறும்படம்… யாரைப் பற்றி தெரியுமா?

ராஜமௌலி இயக்கும் குறும்படம்… யாரைப் பற்றி தெரியுமா?
, திங்கள், 7 ஜூன் 2021 (08:22 IST)
இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக உருவாகி வரும் ராஜமௌலி தற்போது ஆர் ஆர் ஆர் என்ற படத்தை மிக அதிக பொருட்செலவில் உருவாக்கி வருகிறார்.

இந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனராக உருவாகியுள்ள ராஜமௌலி பாகுபலி படத்துக்குப் பிறகு ராம் சரண் மற்றும் ஜூனியர் என் டி ஆர், அஜய் தேவ்கான் மற்றும் ஆலியா பட் ஆகியோரை வைத்து ஆர் ஆர் ஆர் என்ற வரலாற்றுப் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ஆலியா பட் மற்றும் ஹாலிவுட் நடிகை ஒருவர் நடித்து வருகின்றனர். படத்தின் பெரும்பகுதிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் இன்னும் சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட வேண்டியுள்ளது. கொரோனா லாக்டவுன் முடிந்ததும் படப்பிடிப்பு தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது இயக்குனர் ராஜமௌலி கொரோனா லாக்டவுனில் காவலர்களின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் விதமாக 20 நிமிடத்தில் ஒரு குறும்படத்தை இயக்க உள்ளாராம். ஆர் ஆர் ஆர் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் முன்னர் இந்த குறும்படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

#BoycottAmazon: ஃபேமிலி மேன் சீரிஸால் ஏற்பட்ட சிக்கல்