Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆர்யா நடிப்பில் உருவாகும் பையா 2.. ஹீரோயின் இவர்தானாம்!

ஆர்யா நடிப்பில் உருவாகும் பையா 2.. ஹீரோயின் இவர்தானாம்!
, திங்கள், 10 ஏப்ரல் 2023 (09:16 IST)
லிங்குசாமி இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் பையா. கார்த்தியின் சினிமா கேரியரில் இன்றளவும் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தது இந்த படம். இந்நிலையில் இப்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் உள்ளார் இயக்குனர் லிங்குசாமி. ஆனால் ஹீரோவாக கார்த்தி நடிக்காமல் ஆர்யா நடிக்கிறார். லிங்குசாமியே தயாரிக்கிறார்.

இந்த படத்தின் கதாநாயகியாக நடிக்கப் போவது யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. முதலில் ஜான்வி கபூரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஜான்வி கபூர் ஜூனியர் என் டி ஆர் நடிக்கும் படத்தில் அறிமுகமாகிறார். அதனால் இப்போது பூஜா ஹெக்டேவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்,

இந்நிலையில் இந்த படத்தின் ஷுட்டிங் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கதாநாயகி மற்றும் மற்ற தொழில் நுட்பக் கலைஞர்கள் விவரம் விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒவ்வொரு நாளும் ஒரு நாடு… இசைக் கச்சேரி டூரில் கலக்கும் ஆண்ட்ரியா!