Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்து ஷாருக் கான் படத்துக்கு எதிராக ஹேஷ்டேக்… டிவிட்டரில் தொடரும் வெறுப்பு அரசியல்!

Webdunia
வெள்ளி, 19 ஆகஸ்ட் 2022 (09:56 IST)
சமீபத்தில் வெளியான லால் சிங் சத்தா திரைப்படம் மிக மோசமான தோல்வியைப் பெற்றது.

அமீர் கானின் லால் சிங் சத்தா திரைப்படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. அமீர்கான் நடிப்பில் நீண்ட இடைவெளிக்குப் பின் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆவதால் இந்தியா முழுவதும் நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால் இந்த படத்துக்கு எதிராக வட இந்தியாவில் எதிர்ப்புக்குரல்கள் எழுந்தன.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அமீர்கான் “இந்தியாவில் சகிப்பின்மை அதிகரித்து வருகிறது” என்று கூறியதை அடுத்து அவர் தேசபக்தி அற்றவர் எனக் கூறி “தற்போது லால்சிங் சத்தா படத்தைப் புறக்கணிப்போம்” என சிலர் ஹேஷ்டேக் உருவாக்கி பகிர்ந்து வருகின்றனர். இதுபற்றி முன்பே பேசிய அமீர்கான் “நான் நமது நாட்டை நேசிக்கவில்லை என சிலர் நினைக்கின்றனர். ஆனால் அது உண்மையில்லை. என் படத்தை புறக்கணிக்காமல் அனைவரும் பாருங்கள்” எனக் கூறியிருந்தார். ஆனால் படம் அடைந்த படுதோல்விக்கு இந்த ஹேஷ்டேக்குகளும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது அமீர்கான் படத்தை அடுத்து ஷாருக் கான் படமான பதான் திரைப்படத்துக்கு எதிராகவும் BoycattPathan என்ற ஹேஷ்டேக்குகள் உருவாக்கப்பட்டு பரப்பப்பட்டு வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

அடுத்த கட்டுரையில்
Show comments