Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

6 மாதம் கழித்துதான் என் படம் ஓடிடியில்… அமீர்கான் எடுத்த சூப்பர் முடிவு!

6 மாதம் கழித்துதான் என் படம் ஓடிடியில்… அமீர்கான் எடுத்த சூப்பர் முடிவு!
, வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (16:07 IST)
அமீர்கான் நடிப்பில் உருவாகியுள்ள லால் சிங் சத்தா திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.

1994 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான பாரஸ்ட் கம்ப் படம் ஆஸ்கர்களை அள்ளியது. அதுமட்டுமில்லாமல் இன்று வரை உலக சினிமா ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இடம்பெற்றுள்ள படமாக உள்ளது.  இந்த படத்திஅ 25 ஆண்டுகள் கழித்து பாலிவுட் நடிகர் அமீர்கான் லால் சிங் சட்டா எனும் பெயரில் ரீமேக் செய்துள்ளார்.

லால் சிங் சத்தா திரைப்படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் 11 ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமீர்கான் நடிப்பில் நீண்ட இடைவெளிக்குப் பின் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆவதால் இந்தியா முழுவதும் நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்தை தமிழில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இந்நிலையில் இந்த படத்தை ஓடிடியில் திரையரங்குகளில் வெளியாகி 6 மாதம் கழித்துதான் வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார் அமீர்கான். வழக்கமாக ஒரு மாதத்துக்குள்ளாகவே ஓடிடியில் படங்கள் வெளியாவதால் மக்கள் ஓடிடியில் பார்த்துக் கொள்ளலாம் என திரையரங்குகளுக்கு வர ஆர்வம் காட்டுவதில்லை. அதனால் இப்படி ஒரு முடிவை அவர் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபுதேவா நடிப்பில் வெளியான பொய்க்கால் குதிரை… பாக்ஸ் ஆஃபீஸ் டிஸாஸ்டர்!