Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஷாருக் கான் படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்திய விஜய் சேதுபதி

ஷாருக் கான் படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்திய விஜய் சேதுபதி
, புதன், 17 ஆகஸ்ட் 2022 (15:53 IST)
விஜய் சேதுபதி பாலிவுட்டில் இப்போது அதிகளவு படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் புனேவில் தொடங்கி நடந்தது. படப்பிடிப்பில் நயன்தாரா, ஷாருக்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த படத்துக்காக மும்பையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருகிறார் அட்லி. இதையடுத்து சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு மற்றும் தலைப்பு ‘ஜவான்’ என்று அறிவிக்கப்பட்டது.

கடந்த மாதம் ஐதராபாத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க உள்ளது விஜய் சேதுபதி என்ற தகவல் தற்போது பரவி வருகிறது. முன்னர் இந்த வேடத்தில் ராணா நடிக்க இருந்ததாக சொல்லப்பட்டது.

ஆனால் விஜய் சேதுபதி நடிப்பது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் முதல் முறையாக விஜய் சேதுபதி இந்த படம் பற்றி பேசியுள்ளார். சமீபத்தில் நடந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அட்லி- ஷாருக் கான் படத்தில் நடிப்பதை விஜய் சேதுபதி உறுதிப்படுத்தியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகத்தை அறிவித்த பிருத்விராஜ்