Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Thursday, 10 April 2025
webdunia

விருந்தினர் மாளிகை ஆகும் மம்மூட்டியின் வீடு… ஒரு நாளைக்கு வாடகை இவ்வளவா?

Advertiesment
மம்மூட்டி

vinoth

, திங்கள், 24 மார்ச் 2025 (10:41 IST)
மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் மம்மூட்டி. 350க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். சமீபகாலமாக அவர் கமர்ஷியல் மற்றும் கதையம்சமுள்ள பரிச்சாட்தமான படங்கள் என மாறி மாறி நடித்துக் கவனம் ஈர்த்து வருகிறார். 73 வயதாகும் அவர் தற்போதும் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது ரமலான் மாதம் என்பது மம்மூட்டி நடிப்பில் இருந்து விலகி நோன்பு இருந்து வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னால் சில மலையாள ஊடகங்களில் மம்மூட்டிக்குப் புற்றுநோய் என தகவல்கள் பரவி பீதியைக் கிளப்பின. ஆனால் அதை மம்மூட்டியின் செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார். நோன்புக்காலம் முடிந்ததும் மம்மூட்டி விரைவில் தன்னுடைய அடுத்த படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடிக்கவுள்ளார் எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் மம்மூட்டி ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. கேரளாவின் பனம்பிள்ளி நகரில் மம்மூட்டி வசித்த நான்கு அறைகள் மற்றும் ஒரு ஹோம் தியேட்டர் வசதி கொண்ட வீடு தற்போது விருந்தினர் மாளிகையாக மாற்றப்படவுள்ளது. இந்த வீட்டில் முன்பதிவு செய்துகொண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் தங்கிக்கொள்ளலாம். ஒரு நாள் வாடகை 75, 000 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விவாகரத்தின் போது மதுப்பழக்கத்துக்கு அடிமையாக இருந்தேன் – அமீர்கான் ஓபன் டாக்!