Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

க்ளாஸை உடைச்சு பில்டப் பண்ணி வந்தது இதுக்குதானா? டக் அவுட் மூலம் ஹிட்மேன் செய்த புதிய சாதனை!

Advertiesment
Rohit sharma duck out

Prasanth Karthick

, திங்கள், 24 மார்ச் 2025 (10:06 IST)

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் டக் அவுட் ஆனதுடன் ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனையையும் படைத்துள்ளார் ஹிட்மேன் ரோஹித் சர்மா.

 

ஐபிஎல் வந்துவிட்டாலே சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் போட்டிகள்தான் அதில் டாப் எதிர்பார்ப்பில் இருக்கின்றன. ஜாம்பவான் அணிகளான இரு அணிகளுமே தலா 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளனர். இந்த ஆண்டு இரண்டு அணியில் யார் 6வது கோப்பையை வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே உள்ளது.

 

ஆனால் மும்பை இந்தியன்ஸின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவின் டக் அவுட் சோகம் தொடர்ந்தபடியே உள்ளது. நேற்று நடந்த போட்டியிலும் 4 பந்துகளை எதிர்கொண்ட ரோஹித் ஒரு ரன் கூட அடிக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

 

முன்னதாக நேற்றைய Great Rivalry போட்டிக்காக ஒரு விளம்பரம் வெளியாகியிருந்தது. அதில் சிஎஸ்கே பேரை சொன்னதும் ரோஹித் ஆத்திரத்தில் ஜூஸ் கிளாஸை கையாலேயே இறுக்கி உடைத்துவிடுவார். அப்படியெல்லாம் விளம்பரத்தில் பில்டப்பாக இருந்துவிட்டு போட்டியில் டக் அவுட் ஆகிவிட்டதை எதிர்தரப்பு ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

 

மேலும் நேற்றைய டக் அவுட் மூலம் ஐபிஎல் வரலாற்றில் மொத்தம் 18 முறை டக் அவுட் ஆன ரோஹித் சர்மா, ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகமுறை டக் அவுட் ஆன சாதனையை பெற்றுள்ள தினேஷ் கார்த்திக், க்ளென் மேக்ஸ்வெல் சாதனையை சமன் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கண்ணா நீ அவுட்டு கெளம்பு! தோனியின் மின்னல் வேகம்! அதிர்ச்சியில் உறைந்த சூர்யகுமார் - வைரல் வீடியோ!