Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரதமர் பதவியேற்ற 10 நாட்களில் நாடாளுமன்றம் கலைப்பு.. கனடாவில் பெரும் பரபரப்பு..!

Advertiesment
பிரதமர் பதவியேற்ற 10 நாட்களில் நாடாளுமன்றம் கலைப்பு.. கனடாவில் பெரும் பரபரப்பு..!

Mahendran

, திங்கள், 24 மார்ச் 2025 (10:18 IST)
கனடாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள மார்க் கார்னி, நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைத்து பொதுத் தேர்தல் நடத்த அறிவித்துள்ளார். வரும் அக்டோபர் மாதம் வரை பதவிக் காலம் இருக்கும் நிலையில், வரும் ஏப்ரல் 28ஆம் தேதி தேர்தல் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கனடாவில் கடந்த 10 ஆண்டுகளாக பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ மீது மக்கள் மத்தியிலும் ஆளும் லிபரல் கட்சிக்குள்ளும் அதிருப்தி அதிகரித்த நிலையில், அவர் கடந்த மாதம் பதவியை ராஜிநாமா செய்தார். இதனைத் தொடர்ந்து, பொருளாதார நிபுணரான மார்க் கார்னி புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 14ஆம் தேதி அவர் அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார்.
 
பதவியேற்ற 10 நாட்களில், நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை அறிவித்துள்ள கார்னி, "டிரம்ப் நம்மை சிதைக்க நினைக்கிறார். ஆனால், அதற்கு நாம் இடமளிக்கமாட்டோம். அவரது அழுத்தங்களை எதிர்கொள்ள வல்ல தலைவரை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்," என்று வலியுறுத்தினார்.
 
343 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது. பெரும்பான்மை பெற 172 இடங்களில் வெற்றி பெற வேண்டும். தற்போது, ஆளும் லிபரல் கட்சியும் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியும் கடுமையான போட்டியில் உள்ளன.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎல் போட்டியை பார்த்துவிட்டு திரும்பியபோது விபத்து: 2 கல்லூரி மாணவர்கள் பலி..!