கவின் நடித்த ஆகாஷ் வாணி வெப்தொடரின் டிரைலர்!
கவின் நடித்த லிப்ட் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் அடுத்ததாக ஆகாஷ்வாணி என்ற வெப்தொடரில் நடித்து வருகிறார்
இந்த தொடர் ஆஹா என்ற ஓடிடியில் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த தொடரின் டீஸர் சமீபத்தில் வெளியானது
இந்த நிலையில் தற்போது ஆகாஷ்வாணி தொடரின் டிரைலர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டிரைலரில் ஜாலியான ஒரு கவினை பார்க்கலாம் என்பது உறுதியாகிறது
கவின், ரெபா மோனிகா, ஷரத் ரவி, தீபக் பரமேஷ். லிவிங்ஸ்டன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை எனாக் என்பவர் இயக்கியுள்ளார். சாந்தகுமார் ஒளிப்பதிவில், கலைவாணன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு குணா பாலசுப்பிரமணியன் இசையமைத்துள்ளார்.