Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”விஜயகாந்த் பூரண குணமடைய வீடு திரும்ப விரும்புகிறேன்…” நடிகர் கமல்ஹாசன் ட்வீட்!

Webdunia
புதன், 22 ஜூன் 2022 (09:56 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் விஜயகாந்த். தனது ரசிகர்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் இவர் ஏராளமான உதவிகள் செய்துள்ளார். கடந்த 2004 ஆம் ஆண்டு தேமுதிக என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய அவர் சில ஆண்டுகளில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற சாதனை படைத்தார்.

சமீப நாட்களாக நடிகர் விஜயகாந்த் உடல் நடல்க்குறைவால் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அரசியல் முக்கிய நிகழ்வுகளில் மட்டும் பங்கெடுத்து வருகிறார். கட்சியை அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் நிர்வகித்து வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்துக்கு நீரிழிவு பிரச்சனையால் கால் விரலில் இரத்த ஓட்டம் இல்லாததால் அகற்றப்பட்டது. இந்த தகவல் தேமுதிக கட்சி சார்பாக வெளியானது.

அதையடுத்து பலரும் விஜயகாந்த் விரைந்து குணமாக வேண்டும் என ட்வீட் செய்துவருகின்றனர். நேற்று நடிகர் ரஜினிகாந்த் டிவீட் செய்திருந்த நிலையில் தற்போது கமல்ஹாசன் தன்னுடைய ட்வீட்டில் “மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இனிய நண்பர் விஜயகாந்த் பூரண குணமடைந்து,  முழு நலமுடன் வீடு திரும்ப விரும்புகிறேன். விரைந்து குணமடைய வாழ்த்துகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தயாரிப்பாளர் தாணு, நடிகர்கள் தியாகராஜன்,பாக்யராஜ், அம்பிகா,ரம்பா கலந்து கொண்ட "ராபர்” படத்தின் இசை வெளியீட்டு விழா!

கிளாமர் உடையில் ஸ்டன்னிங் லுக்கில் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

துஷாரா விஜயனின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் போட்டோஷூட் ஆல்பம்!

ஜனநாயகன் படத்தில் விஜய்க்கு விடைகொடுக்கும் பாடல்… நடிக்கவுள்ள முன்னணி இயக்குனர்கள்!

இயக்குனர் ஷங்கரின் சொத்து முடக்க விவகாரம்… ஆதரவாக வெளியான நீதிமன்ற உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments