Publish Date: Tue, 21 Jun 2022 (18:52 IST)
Updated Date: Tue, 21 Jun 2022 (18:53 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் உடல் நலம் பெற தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு அதிக சர்க்கரை காரணமாக கால்விரல்கள் அகற்ற பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனை அடுத்து அவர் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என பல அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் தேமுதிக தலைவர் விரைவில் வீடு திரும்ப வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
எனது அருமை நண்பர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்தேன். அவர் விரைவில் நலம்பெற்று, நல்ல உடல்நலத்துடன் இல்லம் திரும்ப விழைகிறேன்.
Mahendran
Publish Date: Tue, 21 Jun 2022 (18:52 IST)
Updated Date: Tue, 21 Jun 2022 (18:53 IST)