Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜயகாந்த் உடல்நலம் குறித்து தொலைபேசியில் விசாரித்த அண்ணாமலை!

Advertiesment
Annamalai
, செவ்வாய், 21 ஜூன் 2022 (18:17 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலம் குறித்து தொலைபேசியில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை விசாரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது 
 
கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் இருக்கும் விஜயகாந்த் அவர்களுக்கு நீரிழிவு நோய் இருப்பதாக தெரிகிறது. இதனை அடுத்து அவரது கால் விரல்கள் அகற்றப்பட்டதாகவும் தேமுதிக அதிகாரபூர்வமாக அறிவித்தது. 
 
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விஜயகாந்தின் உறவினரான சுதீஷ் அவர்களிடம் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடல்நிலையை தொலைபேசி மூலமாக விசாரித்துள்ளார்
 
மேலும் கேப்டன் அவர்கள் ஆண்டவனின் ஆசீர்வாதத்தோடு மக்களுடைய அன்போடு பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதாக அவர் கூறியுள்ளார்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மிதக்கும் Jumbo Restaurant தென் சீன கடலில் மூழ்கியது!